எனதழகே நீயில்லாமலே
எதில் வாழுவேன்?
உனதிதயத் தீயில்லாமலே
எதில் வீழுவேன்?
இமை திறக்காது கிடப்பின்
எதில் எந்தன் வாசல் அமைப்பேன்?
உன் பார்வை இல்லாமல்
என் நாளை இங்கில்லை!
உன் வார்த்தையின்றி
காற்றும் மெய்யில்லை!
பெண்ணே நீ சொல்வாயா?
இங்கெல்லாமே பொய்யா?
என் கண்கள் இனி தேவையில்லை!
தோளில் துயில்கையில்
பேரை முனகினாய்
எனது இதயங்கிழிந்தேன்....
பொய்கள் தொடருவாய்
கோபத்தை எழுப்புவாய்
நான் என் இதயம் அறுந்தேன்
உனது விரல்களைக் கோக்க
அழைத்துச் செல் எனையும்...
உன் பார்வை இல்லாமல்
என் நாளை இங்கில்லை!
உன் வார்த்தையின்றி
காற்றும் மெய்யில்லை!
பெண்ணே நீ சொல்வாயா?
இங்கெல்லாமே பொய்யா?
என் கண்கள் இனி தேவையில்லை!
உடைந்து போன என்
உலகம் ஒன்றிலே
உன்னை விலக நினைத்தேன்
உன்னைப் பிரிவதும்
உயிரைப் பிரிவதும்
வேறு அல்ல உணர்ந்தேன்
பிரிந்த பிறகு அக் கோபம்
கொன்று என்னை புதைக்க...
உன் பார்வை இல்லாமல்
என் நாளை இங்கில்லை!
உன் வார்த்தையின்றி
காற்றும் மெய்யில்லை!
பெண்ணே நீ சொல்வாயா?
இங்கெல்லாமே பொய்யா?
என் கண்கள் இனி தேவையில்லை!