லெப்டினன்ட் கேணல் திலீபன் மாமா
வானத்திலிருந்து சொல்கிறார் கேள்!
தமிழீழ விடுதலைக்காகத் தொடங்கிய
போராட்டத்தை நிறுத்தாதே!
அவர் வீரச்சாவு அடைந்த ஆண்டு 1987
செப்டம்பர் 26 அகவை 23 - அவர்
தலைவருக்கும் நாட்டுக்கும் விசுவாசமாக இருந்தார்
எங்கள் வீரப்போராட்டத்தை
அச்சம் இன்றி வழிநடத்தினார்!
ஒன்றல்ல இரண்டல்ல
பன்னிரு நாள்கள்
உண்ணாவிரதம் இருந்தார்
உயிர்க்கொடை தந்தார்
எல்லோரையும் மதிப்பவர் - மருத்துவத்துறையில் படித்தவர்
நாட்டுப்பற்றுக் கொண்டவர் - புலிதீரத்தை காட்டியவர்
சிங்களக் குடியேற்றம் வேண்டாம் - தமிழ்
அரசியல் கைதிகள் வேண்டாம்
அவசர கால சட்டம் வேண்டாம்
ஊர்க்காவலர் ஆயுதம் வேண்டாம்
தமிழர் தாயகத்தில் - புதிய
பொலிஸ் நிலையம் வேண்டாம்
என்ற 5 அம்சக் கோரிக்கையொடு
சாக விட்டது இந்திய அரசு
தமிழீழ விடுதலைப் புலிகள் படை
சிங்கள பகை செய்தது தடை
உடைத்தெறிந்தது அதை - எங்கள்
நெறியாளர் மாவீரர் விதை
அமைதி போராட்டம் ஆயுதம்
பார்த்திபன் உரையில் உணர்வின்றும் பார்க்கிறோம்
துறையில் உயிரை காக்கின்ற மருத்துவம்
உமது வீரச்செயலது நிராயுதம்
உலகம் எமது அழிவுகளை பார்க்கவும்
தமிழர் உரிமை உணர்வோடு வாழவும்
இந்திய அமைதிப் படைக்கு எதிராகவும்
மரணப் படுக்கையில் திலீபன் தாண்டவம்
மறுத்திடாதே தமிழனே உரிமையை
மடிந்திடாதே பகைவனின் வலையினில்
மறவாதே தமிழரின் விடிவினை
துவண்டிடாதே தலைமுறை கடப்பினும்
அச்சம் மறையணும் - அடிமை விலங்கினில்
துச்சம் உடையணும் - பறை முழங்கு
உலகுக்கே உணர்த்தணும் - விழித்திடு
ஒளிரட்டும் விடுதலை உனதினி
வீரத்தமிழனே மீண்டும்
எழுந்து துணிந்து வாடா
எம் தமிழீழ மண்
சிங்களவனின் நாடா?
மாவீரர் கனவு அழியாது
நாட்டுப்பற்று குறையாது
தலைவர் வரலாறு மறவாது
புலியின் இலக்கு தவறாது
களங்கள் அனைத்தும் குருதி புலிகளாக நாங்கள் பாயணும்
எதிரிப் படைகள் இன்றும் பிடரி அடிக்கச் சிதறி ஓடணும்
நினைவு மறக்குது சில தமிழருக்கே திருப்பிக் காட்டணும்
எழடா துணிவோடினி உனது உரிமை நீதான் கேட்கணும்
அமைதியாக வாழ்ந்த நாள்கள் போதும்
உலகினில் அகதியாக மாறிச்சென்ற மக்கள் போதும்
தமிழரின் உரிமைக்காக மாண்ட திலீபன் அண்ணன் நினைவில்
உனது நோக்கம் என்னவென்று உரைத்திடு தமிழா உலகமறிய
சுடடா சுடடா விடியல் வரும்
விடுதலை வாழ்வு நொடியில் வரும்
துவக்கை எடுத்து சுடு சுடு
திருப்பி திருப்பி குடு குடு
உலகில் அறம் சாயுமா
புலிகள்படை ஓயுமா
திலீபன் மாமா சொன்னதை
பெருமையோடு கேளடா
தலைவர் மாமா போற்றணும்
வரலாறு பேசட்டும் - எம்
தேசக்கொடி பறக்கட்டும் - இங்கு
மக்கள் புரட்சி வெடிக்கட்டும்